ராமேஸ்வரம்: பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி துவக்கம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.தமிழக கிராம கோயிலில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு கடவுளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், தியான ஸ்லோகங்கள், அர்ச்சனை மந்திரங்கள், அபிஷேக முறைகள் குறித்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்: பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி துவக்கம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.
தமிழக கிராம கோயிலில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு கடவுளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், தியான ஸ்லோகங்கள், அர்ச்சனை மந்திரங்கள், அபிஷேக முறைகள் குறித்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் 52வது ஆலய வழிபாட்டு 15 நாள் பயிற்சி முகாம் துவங்கியது. விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டல தலைவர் சரவணன் வரவேற்றார். கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனரும், தமிழக வி.ஹெச்.பி., நிறுவனத் தலைவருமான எஸ். வேதாந்தம் சிறப்புரை ஆற்றினார்.
பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், இணை பொது செயலாளர் ராமசுப்பு, புலவர்கள் வசந்தா, பாரதி, பக்ஷிசிவராஜன், விவேகானந்தா குடில் சுவாமி பிரணவானந்தா, திருத்தொண்டர் மடம் சுவாமி சிவசேதுராம முருகவேல், ராமநாதசுவாமி கோயில் சிவமணி குருக்கள், சாந்தா அறக்கட்டளை நிர்வாகி சாந்தாம்மா, வி.ஹெச்.பி., நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 125 கிராம கோயில் பூஜாரிகள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X