காலமெல்லாம் என் முகம் தான் மக்கள் நினைவுக்கு வரும்!

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராணிப்பேட்டை:''திராவிட மாடல் என்றால், காலமெல்லாம் என் முகம் தான் மக்கள் மனதில் நினைவுக்கு வரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில், 118.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் 60 ஆயிரத்து, 577 பேருக்கு, 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா, ராணிப்பேட்டையில் நடந்தது.முதல்வர்

ராணிப்பேட்டை:''திராவிட மாடல் என்றால், காலமெல்லாம் என் முகம் தான் மக்கள் மனதில் நினைவுக்கு வரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 118.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் 60 ஆயிரத்து, 577 பேருக்கு, 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா, ராணிப்பேட்டையில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட மாடல் என்றால் காலமெல்லாம் என் முகமும், என் குரலும் மக்கள் மனதில் நினைவுக்கு வரும். அது போதும் எனக்கு!தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தவற்றில், 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நான் சட்டசபையில் பட்டியல் போட்டிருக்கிறேன்.

வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான், மக்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன். நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அரசியலில், 55 ஆண்டு காலமாக உள்ள எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை!ஏற்கனவே எனக்கு கிடைத்திருக்கும் புகழையும், பெருமையையும் காப்பாற்றினால் போதும் என நினைப்பவன் நான். தமிழக மக்களின் நலன் கருதி, தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி காண வேண்டும் என்பதற்காக, என் சக்தியை மீறி உழைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202204:10:58 IST Report Abuse
Girija அட இளமை இதோ இதோ இதோ இனிமை இதோ இதோ இதோ ................ எம் ஜி ஆர் கூட இப்படி சொல்லலையே? இவரு காசுக்கு அல்ல வெக்காம சொந்தமா எப்படி கூவிக்கிறார் ? அம்மாடியோவ் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X