ரயில்வே டிக்கெட் முன்பதிவு:போஸ்ட் ஆபீசில் 4ல் துவக்கம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
வால்பாறை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை போஸ்ட் ஆபீசில் வரும், 4ம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு துவங்கப்படுகிறது.வால்பாறையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், பொள்ளாச்சி, கோவைக்கு சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில், வால்பாறையில் ரயில்வே முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என, கடந்த, பத்து ஆண்டுகளுக்கு

வால்பாறை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை போஸ்ட் ஆபீசில் வரும், 4ம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு துவங்கப்படுகிறது.வால்பாறையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், பொள்ளாச்சி, கோவைக்கு சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் ரயில்வே முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என, கடந்த, பத்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரத்தின் முயற்சியால், வால்பாறை போஸ்ட் ஆபீசில் ரயில்வே முன்பதிவு துவங்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. மத்திய அரசு அனுமதி வழங்கியும் டிக்கெட் முன்பதிவு மையம் துவங்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வரும், 4ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கும் விழாவில், பொள்ளாச்சி எம்.பி., கலந்து கொண்டு, ரயில்வே முன்பதிவை துவக்கி வைக்கிறார்.விழாவில், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X