'ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லாது'

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சென்னை:'ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில், தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல' என, அ.தி.மு.க பொருளாளர் பன்னீர்செல்வத்துக்கு, தலைமை நிலையச் செயலர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள, 510 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 இடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க.,

சென்னை:'ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில், தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல' என, அ.தி.மு.க பொருளாளர் பன்னீர்செல்வத்துக்கு, தலைமை நிலையச் செயலர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள, 510 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 இடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்க வசதியாக, 'படிவம் - ஏ, படிவம் - பி' ஆகியவற்றை தனக்கு அனுப்பி வைக்கும்படி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.


காலாவதி
அதற்கு பதில் அளித்து பழனிசாமி அனுப்பி உள்ள கடிதம்:கடந்த 23ம் தேதி நடந்த கட்சி பொதுக் குழுவில், 2021 டிச., 1 அன்று நடந்த செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை; அவை காலாவதி ஆகிவிட்டன.

எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில், தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்க தல்ல.உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு, நடக்க உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடைசி நாள், 27ம் தேதி முடிந்து விட்டது. இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கட்சி வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27ம் தேதி கூட்டப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை தாங்கள் புறக்கணித்த நிலையிலும், தற்போதைய தங்களின் கடிதம் ஏற்புடையதாக இல்லை.
அதேபோல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கட்சி பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக, தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்கு, கடிதம் வழியே புகார் அளித்தீர்கள். நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்து, அ.தி.மு.க.,வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை அனுப்புவது ஏற்புடையதாக இல்லை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X