'அ.தி.மு.க.,வில் தார்மீக உரிமையை பன்னீர்செல்வம் இழந்து விட்டார்!'

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:''அ.தி.மு.க.,வில் தார்மீக உரிமையை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்,'' என, எம்.எல்.ஏ., முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரியில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தலில், 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் தார்மிக உரிமையை பன்னீர்செல்வம் இழந்து விட்டார். கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தபடி, பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளாமல்,

கிருஷ்ணகிரி:''அ.தி.மு.க.,வில் தார்மீக உரிமையை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்,'' என, எம்.எல்.ஏ., முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தலில், 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் தார்மிக உரிமையை பன்னீர்செல்வம் இழந்து விட்டார். கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தபடி, பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளாமல், பொதுக்குழு நடப்பதை தடுக்க நீதிமன்றம் சென்றார்.கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வோர், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது விதி.

பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என, கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு சென்றார். அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என, நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். மொத்தமுள்ள, 75 மாவட்ட செயலர்களில், 70 பேரும், அ.தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,க்கள், 66 பேரில், 63 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள், 2,665 பேரில், 2,582 பேரும் பழனிசாமியை தலைவராக முடிவு செய்துள்ளனர்.
கட்சிக்கு தலைவராக இருந்தவரும், மூன்று முறை முதல்வராக இருந்தவருமான பன்னீர்செல்வம், தற்போதைய நிலைமையை புரிந்து, எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளும் பங்காளிகள். எங்களுக்குள் பகைமை இருக்கும். ஆனால், வேறு கட்சிகள் உள்ளே நுழைய முடியாது.இதை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில் பன்னீர்செல்வம் இறங்கியுள்ளார். கட்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் எதிர்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X