ஸ்ரீவி., நீதிமன்றத்தில் அமைச்சர்கள் ஆஜர்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்ஆஜராகினர்.2006--2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 5 பேர் மீது, ஜெயலலிதா ஆட்சி

ஸ்ரீவில்லிபுத்துார்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்ஆஜராகினர்.
2006--2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 5 பேர் மீது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வாய்தா நாளான நேற்று காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கபட்டது. இதனையடுத்து விசாரணையை ஆக.,30க்கு ஒத்திவைத்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X