'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதியாக இருக்க மாட்டேன்: யஷ்வந்த் சின்ஹா

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:''ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயல்படுவேன்,'' என, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,- தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதியாக இருக்க மாட்டேன்: யஷ்வந்த் சின்ஹா

சென்னை:''ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயல்படுவேன்,'' என, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,- தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

மதச்சார்பின்மை
சென்னை வந்த அவர், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த, கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு கோரினார்.தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், தி.மு.க., எம்.பி.,க்கள் கனிமொழி, சிவா, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரவேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்திய ஜனநாயக அமைப்பின், மிக உயரிய தேர்தலில் போட்டியிடும் உன்னதமான, உயர்ந்த மனிதரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு என் வாழ்த்துகள்,'' என, தெரிவித்தார்.
சின்ஹா பேசியதாவது:மத்திய பா.ஜ., ஆட்சியில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளான, ஜனநாயகம், மதச்சார்பின்மை மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., மேற்கொண்ட சதி செயல்களால், நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, கவர்னர் அலுவலகம் போன்ற நிர்வாக அமைப்பை, தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, பா.ஜ., அரசு பயன்படுத்துகிறது. மஹாராஷ்டிராவில் இப்போது நடந்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை. ஜனாதிபதியின் ஏஜன்டாக செயல்பட வேண்டிய கவர்னர், பா.ஜ., ஏஜன்டாக செயல்படுகிறார்.


வெற்றி வாய்ப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதித்து, கவர்னர்கள் செயல்பட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு இடையூறு செய்யும் வகையில், கவர்னர்கள் செயல்படுகின்றனர்நாடு கடுமையான அச்சுறுத்தல்களை சந்திக்கும் தருணத்தில், பாரபட்சமற்ற முறையில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவர் தேவை. எனவே தான், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறேன்.நான் 'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதியாக இருக்க மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், செய்தியாளர்களிடம் சின்ஹா கூறியதாவது:பா.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவரது வேட்புமனுவை, தேர்தல் அதிகாரியிடம், பிரதமர் மோடி தான் ஒப்படைத்தார். இதிலிருந்து, முர்மு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்; இருக்கப் போகிறார் என்பது தெரிகிறது.ஜனாதிபதி என்பவர் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர். அவர், ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் கைதியாக இருக்கக் கூடாது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் மத்திய அரசு சமநிலை தவறும்போது, சுதந்திரமாக தட்டிக்கேட்கும் ஜனாதிபதியை, பா.ஜ., விரும்பவில்லை.என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கோருவேன். பண மதிப்பிழப்பு போன்ற மோடி அரசின் திட்டங்களால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது.

'அக்னிபத்' திட்டம், முட்டாள்தனமானது; ராணுவத்தில் விளையாடுவது ஆபத்தானது. எதிர்க்கட்சிகளை மிரட்ட, ஆட்சிகளை கவிழ்க்க, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அரசு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறு சின்ஹா கூறினார்.

வாசலில் வரவேற்ற ஸ்டாலின்!

@@bloc
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று சென்னை அறிவாலயம் வந்த யஷ்வந்த் சின்ஹாவை, வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார் ஸ்டாலின்.

திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் காரில் சின்ஹா வந்தார்
* ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசும்போது, சின்ஹாவுடன் தன் நட்பையும், தன் வீட்டுக்கு வந்து மூன்று முறை உணவு அருந்தியதையும் நினைவுகூர்ந்தார். நன்றியுரை ஆற்றிய திருச்சி சிவா, சின்ஹாவை ஏன் தி.மு.க., ஆதரிக்கிறது என்று நீண்ட விளக்கம் அளித்தார்
* தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் சின்ஹா பேசிக் கொண்டிருந்தார். 20 நிமிடங்களில், முதல்வர் ஸ்டாலின் வந்து எட்டிப் பார்க்க, அத்துடன் பேட்டியை முடித்து கொண்டார் சின்ஹா
* சின்ஹாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, கருணாநிதி வாழ்க்கை வரலாறு ஆங்கில புத்தகத்தை பரிசளித்தார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202204:07:10 IST Report Abuse
Girija அதுக்கும் மேல நிறைய வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டு அட்வான்சா கொடுத்திடுவேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X