புதுடில்லி :''கடல் வழி வர்த்தகம்,கடல் வளங்கள் ஆகிய வற்றை சார்ந்தே, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
புதுடில்லியில், கடல்சார் பாதுகாப்பு குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாவது:நாட்டின் கடல்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு இடையே, தடையற்ற ஒருங்கிணைப்பு வேண்டும்.
![]()
|
நாட்டின் ஒட்டு மொத்த கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில், கடலோர காவல் படை மற்றும் கடற்படை ஆற்றி வரும் பணிகள் பாராட்டத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பகுதி, நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. சர்வதேச அளவில், முக்கிய வர்த்தகப் பாதையாக இந்தியப் பெருங்கடல் உள்ளது. அதை பாதுகாக்க, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்திய வர்த்தகத்தின் 95 சதவீதம் கடல் சார்ந்தே உள்ளது. 12 பெரிய துறைமுகங்கள், 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் வழியாக, இந்திய வர்த்தகம் பயணிக்கிறது.
கடல் வழி வர்த்தகம் மற்றும் கடல் வளங்களை சார்ந்தே, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement