முக கவசம் கட்டாயம்கல்வித்துறை அறிவுரை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சென்னை:கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வி ஆண்டில் தேர்வுகள் முடிந்து, சான்றிதழ் வழங்கும் பணிகளும், புதிய மாணவர் சேர்க்கை பணிகளும் பள்ளிகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் அதிகம்

சென்னை:கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வி ஆண்டில் தேர்வுகள் முடிந்து, சான்றிதழ் வழங்கும் பணிகளும், புதிய மாணவர் சேர்க்கை பணிகளும் பள்ளிகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வழியே, கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, பள்ளி வளாகத்தில் நுழையும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களை, வெப்ப பரிசோதனை செய்த பின் அனுமதிக்க வேண்டும். சராசரி வெப்பத்தை விட அதிகமாக காணப்பட்டால், சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்தில் முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கைகளை சுத்தம் செய்ய, சோப்பு, கைகளை சுத்தம் செய்யும் திரவம் வைத்துஇருக்க வேண்டும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்த போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X