அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையா: விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் மறுப்பு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை ஜூலை 4ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்த உயர் நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை கோரியதை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது.கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை கோரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த

சென்னை:அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை ஜூலை 4ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்த உயர் நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை கோரியதை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது.
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை கோரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு 'வரைவு தீர்மானங்கள் 23ஐ தவிர்த்து புதிதாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது; பொதுக்குழுவில் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்; ஆனால் அதுகுறித்து முடிவெடுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து 23ம் தேதி பொதுக்குழு கூடியது. அதில் 23 தீர்மானங்களையும் ரத்து செய்வதாகவும் கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜூலையில் பொதுக்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு:அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
23 வரைவு தீர்மானங்களில் அவைத் தலைவர் நியமனம் குறித்து எந்த தீர்மானமும் இல்லை. அவைத் தலைவராக இருந்து பொதுக்குழுவில் அறிமுகப்படுத்திய தீர்மானத்தை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்ட முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை பழனிசாமி சி.வி.சண்முகம் கே.பி.முனுசாமி தமிழ்மகன் உசேன் ஜெயகுமார் சீனிவாசன் ஆகியோர் பின்பற்றவில்லை.
எனவே 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும்; அவைத் தலைவராக செயல்படவும் தடை விதிக்க வேண்டும்.ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்களை அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் மனுதாரர் சண்முகம் தரப்பில் முறையிடப் பட்டது. அதற்கு நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான அவமதிப்பு வழக்கை வரும் ௪ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் 11ம் தேதி பொதுக்குழு தொடர்பான கோரிக்கையை விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தடை கோரி வழக்கு
இதற்கிடையில் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
'விதிமுறைகளை மீறி அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது' என அறிவிக்கக் கோரி சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய சூரியமூர்த்தியின் மனு நீதிபதி தாமோதரன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பன்னீர்செல்வம் பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.இந்த மனுவில் பிரதிவாதிகளாக அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம்; முன்னாள் மாவட்ட செயலர் பழனிசாமி என குறிப்பிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X