கந்துவட்டி:தாய், மகன்கைது

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:சீர்காழியில், கந்துவட்டி வழக்கில் தாய், மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் ஆமப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 35. இவர் மயிலாடுதுறை எஸ்.பி., நிஷாவிடம், கந்துவட்டி தொடர்பாக புகார் தெரிவித்தார்.எஸ்.பி., உத்தரவின்படி வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார், கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனையிட

மயிலாடுதுறை:சீர்காழியில், கந்துவட்டி வழக்கில் தாய், மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் ஆமப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 35. இவர் மயிலாடுதுறை எஸ்.பி., நிஷாவிடம், கந்துவட்டி தொடர்பாக புகார் தெரிவித்தார்.எஸ்.பி., உத்தரவின்படி வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார், கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனையிட நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.

தொடர்ந்து சீர்காழி டி.எஸ்.பி., லாமெக் தலைமையில் போலீசார், கந்துவட்டிக்கு பணம் கொடுத்த வழுதலைக்குடி அக்ரஹார மேட்டுத் தெருவைச் சேர்ந்த சோலையம்மாள், 65, வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது வீட்டில் இருந்த அடமான பத்திரங்கள் 25, உத்தரவாத பத்திரங்கள் எட்டு, தகவல் எதுவும் நிரப்பப்படாத 11 பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன், 40, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X