முதலை கடித்து ஒருவர் பலி

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
விஜயபுரா:முத்தேபிஹாலின், ஹங்டரகல்லா கிராமம் அருகில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில், மற்றொரு நபர் முதலைக்கு பலியானார்.கர்நாடக மாநிலம் விஜயபுரா, முத்தேபிஹாலின் ஹங்டரஹள்ளி கிராமத்தில், கிருஷ்ணா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நுாற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. இதுவரை பலர் முதலைக்கு பலியாகி உள்ளனர். இதனால் ஆற்றில் கால் வைக்கவே, மக்கள் பயப்படுகின்றனர்.ஹங்டரஹள்ளியில் வசித்தவர்

விஜயபுரா:முத்தேபிஹாலின், ஹங்டரகல்லா கிராமம் அருகில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில், மற்றொரு நபர் முதலைக்கு பலியானார்.
கர்நாடக மாநிலம் விஜயபுரா, முத்தேபிஹாலின் ஹங்டரஹள்ளி கிராமத்தில், கிருஷ்ணா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நுாற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. இதுவரை பலர் முதலைக்கு பலியாகி உள்ளனர். இதனால் ஆற்றில் கால் வைக்கவே, மக்கள் பயப்படுகின்றனர்.
ஹங்டரஹள்ளியில் வசித்தவர் நாகப்பா சஞ்சிவப்பா உன்டி, 55. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். நாகப்பா நேற்று காலை, ஆற்றில் கால் கழுவ சென்ற போது, முதலை இழுத்து கடித்து கொன்றது. முதலை தொந்தரவை கட்டுப்படுத்தும்படி, வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆற்றில் முதலை இருப்பதை பற்றி, 'தண்டோரா' போட்டு எச்சரித்து விட்டு, மவுனமாகி விடுகின்றனர். இனியாவது முதலைகளை கட்டுப்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X