'பெண்களுக்கு எதிரான குற்றம் குறையும்'

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
அவிநாசி;''தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கும் திட்டத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்'' என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில், பணிபுரியும் இடங்களில், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கு, தொழில் நிறுவனங்களில், 'பாதுகாப்பு பெட்டி' வைக்கும் அறிமுக

அவிநாசி;''தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கும் திட்டத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்'' என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில், பணிபுரியும் இடங்களில், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கு, தொழில் நிறுவனங்களில், 'பாதுகாப்பு பெட்டி' வைக்கும் அறிமுக நிகழ்ச்சி, அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்தது.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா பேசியதாவது:திருப்பூரில், அதிகளவில் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தின் முக்கிய தொழில் துறை உற்பத்தி சார்ந்த மாவட்டமாக உள்ளது. மாநில அளவில் பெண்களின் உழைக்கும் திறன் அதிகமுள்ள பகுதியாகவும் திருப்பூர் விளங்குகிறது.பணிபுரியும் இடங்களில் பெண்கள் மகிழ்ச்சி, பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். இதை உறுதிப்படுத்துவது தான், பாதுகாப்பு பெட்டி வைக்கும் திட்டம். இந்த விழிப்புணர்வு, மாநிலம் முழுக்க சென்று சேரும். வெளியூர் சென்று பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.அரசின், இலவச பயண திட்டத்தால், 170 கோடி முறை பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். பெண்கள் பிற இடங்களுக்கு தனியாக சென்று போது, அவர்களுக்கான சுதந்திரம், பணித்திறன் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''பாதுகாப்பு பெட்டியில் போடப்படும் புகார் உறுதி செய்யப்படும் போது, தவறிழைப்போர் பணி நீக்கம் செய்யப்படுவர்; அவர்கள் மீது சட்டம் பாயும் என்ற நிபந்தனையை, தொழில் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தினால், பெண்களுக்கு எதிரான குற்றம் குறையும்,'' என்றார்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசுகையில், ''திருப்பூரில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அசாம் மாநில பெண்கள் சாரை, சாரையாக வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்தும் அதிகளவு பெண்கள் வருகின்றனர். ஆண், பெண்களுக்கான பாதுகாப்பு, இங்கு சமநிலைப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'டீமா' தலைவர் முத்துரத்தினம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X