இளைஞரின் இருதயத்தை பொருத்திஇருதய மாற்று அறுவை சிகிச்சை!

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை;பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் முதன் முறையாக, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த், 40; சுய தொழில் செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக இருதய பாதிப்பின் காரணமாக, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் இருதயம் மிகவும் பாதிப்படைந்து, மோசமான நிலையில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.,
இளைஞரின் இருதயத்தை பொருத்திஇருதய மாற்று அறுவை சிகிச்சை!

கோவை;பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் முதன் முறையாக, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த், 40; சுய தொழில் செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக இருதய பாதிப்பின் காரணமாக, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் இருதயம் மிகவும் பாதிப்படைந்து, மோசமான நிலையில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, சிகிச்சைகள் அளித்தும், அவரது இருதயம் சீரான நிலைக்கு திரும்பவில்லை. பிற உறுப்புகளும் பாதிப்படைய துவங்கியது. அவருக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, மருத்துவர்கள் முடிவு செய்தனர்.பின்னர், இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் முருகேசன், மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த நாராயணன், மினிமலி இன்வேசிவ் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் சிவக்குமார், கார்டியாக் கிரிட்டிக்கல் கேர் பிரிவின் தலைவர் கணேசன் ஆகியோர் பங்கேற்று, 21 வயதில் மூளை சாவு அடைந்த சிறுவனின் இருதயத்தை பொருத்தி, சாதனை படைத்தனர்.உரிய நேரத்தில் செயல்பட்டு, நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை, பி.எஸ்.ஜி., குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X