உயிர் காக்கும் உன்னத உயிர்கள் -இன்று (ஜூலை 1) டாக்டர்கள் தினம்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை:வாராது வந்த மாமணியாய் உயிர்களின் நோய் தீர்க்கும் கருணைக் கடவுள் டாக்டர் தான். வாழ்வின்வேதனைகளுக்கு விடை கொடுத்து வசந்தத்திற்கு அழைத்துச் செல்லும் டாக்டர்களின் சேவை மகத்தானது. எல்லோருக்கும் வேலைநேரம் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கும். இவர்களுக்கு பகல், இரவு எல்லாம் ஒன்று தான். இன்று (ஜூலை 1) டாக்டர்கள் தினம். உயிர் காக்கும் உன்னத உயிர்களாம் டாக்டர்களை
 உயிர் காக்கும் உன்னத உயிர்கள் -இன்று  (ஜூலை 1) டாக்டர்கள் தினம்

மதுரை:வாராது வந்த மாமணியாய் உயிர்களின் நோய் தீர்க்கும் கருணைக் கடவுள் டாக்டர் தான். வாழ்வின்வேதனைகளுக்கு விடை கொடுத்து வசந்தத்திற்கு அழைத்துச் செல்லும் டாக்டர்களின் சேவை மகத்தானது.

எல்லோருக்கும் வேலைநேரம் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கும். இவர்களுக்கு பகல், இரவு எல்லாம் ஒன்று தான். இன்று (ஜூலை 1) டாக்டர்கள் தினம். உயிர் காக்கும் உன்னத உயிர்களாம் டாக்டர்களை இந்நன்னாளில் நன்றியோடு வாழ்த்துவோம். அழுகுரலை ஆனந்தகுரலாய் மாற்றும் வல்லமை படைத்த டாக்டர்கள், தங்களின் வாழ்வின் சவாலான தருணங்களை அனுபவமாக டாக்டர்கள் தினத்தில் பகிர்ந்து கொண்டனர். மதுரையின் சில டாக்டர்கள் கூறியது...


சுகப்பிரசவமே எனது லட்சியம்



டாக்டர் சுமதி ஆனந்த், மகப்பேறு மருத்துவம்: புதுச்சேரி ஜிப்மரில் படித்ததால் மகப்பேறு மருத்துவத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டேன். கர்ப்பிணியின் குடும்பத்தினர் அறுவை சிகிச்சை வேண்டும் என்று கேட்டாலும் முடிந்தவரை சுகப்பிரசவத்தின் அருமையை புரிய வைக்கிறேன். நவீன மருத்துவம் எல்லா
வகையிலும் முன்னேறி விட்டது. ஒரு குழந்தை போதும் என்ற மனப்பான்மை எல்லோருக்கும் வந்து விட்டது. அந்த ஒரு குழந்தையை கருவிலிருந்தே சரியாக
பராமரிப்பது தான் மகப்பேறு டாக்டரின் முக்கிய வேலை.கரு உருவான 6 முதல் 14 வாரங்கள் வரை உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனித்து கொள்வது அவசியம். அந்த நேரத்தில் நஞ்சுக்கொடி உருவாகும் போது ரத்தக்குழாய் திறந்தநிலையில் இருந்தால் ரத்த
அழுத்தம் வராது. இதற்காக குடும்பத்தினரை வரவழைத்து கவுன்சிலிங் செய்கிறேன். ரத்தசோகை இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், ைஹப்போ தைராய்டு இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். குழந்தைப்பேறு என்பது சாதாரண விஷயமல்ல. கொரோனா தொற்றுக்கு பின் புற்றுநோய், மலட்டு தன்மை அதிகரித்து விட்டது. தினமும் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிக்குள் குறைந்து
15 முதல் 30 நிமிடங்கள் சூரியவெளிச்சத்தில் நடப்பதோ, நிற்பதோ நல்லது. கரு உருவான உடன் தேவையான பரிசோதனைகளை செய்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.


சாவிலிருந்து மீட்டது சந்தோஷம்



டாக்டர் பழனியப்பன், நுரையீரல் மருத்துவம்: கடுமையான மூச்சு திணறலோடு ஒரு இளம்பெண் சிகிச்சைக்கு வந்தார். அவருடன் கணவர், இரண்டு குழந்தைகள் வந்தனர். அந்த பெண்ணின் அறிகுறிகளை பரிசோதித்த போது நுரையீரல் ரத்தக்குழாயில் ரத்தக்கட்டு இருந்தது கண்டறிந்தோம். உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்த போது இறப்புநிலைக்கு சென்று விட்டார். 'ஷாக்' கொடுத்து அவரை மீட்டு
வென்டிலேட்டரில் வைத்தோம்.ரத்தக்கட்டை கரைக்கும் மருந்துகளை ஊசிமூலம் செலுத்தினோம். 15 முதல் 20 நாட்கள் கண்காணிப்பில் இருந்தார். நட்போ, உறவுகளோ யாருமின்றி 2 கைக்குழந்தைகளுடன் அந்த கணவர் மட்டும் ஐ.சி.யு. வழியாக மனைவியை
கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார். அதை பார்க்கும் போது அந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மனது பரிதவித்தது. அந்த பெண் மீண்டதும் கணவர் என்னைப் பார்த்து 'மனைவிக்கு ஏதாவது ஆயிருந்தால் 2 குழந்தைகளுடன் நானும் இறந்திருப்பேன்.
எங்கள் குடும்பத்தை வாழ வைத்து விட்டீர்கள்' என்று அழுதே விட்டார். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை அளித்த திருப்தி எனக்கும் ஏற்பட்டது.


மனநோயும் உடல்ரீதியான நோயே



டாக்டர் குமணன், மனநல மருத்துவம்: 20 ஆண்டுகளுக்கு முன் தம்பதி, ஒன்றரை வயது குழந்தையுடன் மனநல வார்டுக்கு வந்தனர். அந்த பெண்ணுக்கு

சந்தேகநோய் (சிசோபெர்னியா). கணவரை சிலநேரங்களில் வீட்டுக்குள் பூட்டி வைக்கும் அளவிற்கு கடுமையாக இருந்தது. யாரையும் வீட்டுக்குள் அந்த பெண் அனுமதிக்கவில்லை. எனது டாக்டர் நண்பர் மூலம் அந்த பெண் அறிமுகமானார். மனநலத்திற்கான
மாத்திரைகளை சாப்பிட வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும் மாத்திரை கொடுக்க முடியவில்லை. அந்த காலத்திலேயே ரூ.200க்கு ஊசி வாங்கி செலுத்த முயன்றோம். திமிறி ஆர்ப்பாட்டம் செய்து ஊசியை தட்டி உடைத்து விட்டார். பெண்ணின் பெற்றோரும் உதவிக்கு வரவில்லை.கணவர் விவாகரத்து செய்யப் போகிறேன் என்றதும் பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து வந்தனர். ஒருமுறை ஊசி செலுத்தியதும் மனதளவில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. மெல்ல அமைதியானார்.

அதன்பின் தொடர்ந்து பல ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டார்.மனநலம் சரியான பின் கணவருடன் வந்த பெண், இப்போதெல்லாம் கணவர் மீது கோபமோ, சந்தேகமோ வரவில்லை. நான் நன்றாக இருக்கிறேன்' என்றார். கணவரோ, 'எனக்கும் குழந்தைக்கும் தெய்வமாக இருந்து மனைவியை மீட்டு நல்ல வழிகாட்டினீர்கள்' என்று கும்பிட்டார். ரத்தகொதிப்பு, சர்க்கரைநோய், முடக்குவாதம் போலவே மனநலமும் ஒரு நோய் தான். ஆரம்ப கட்டத்தில் குடும்பத்தினர் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மீட்டு விடலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202209:41:13 IST Report Abuse
S Bala அவரவர் கற்ற கல்வியையும் தொழிலையும் வைத்து மற்றவர் முன்னேற உழைத்தால் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே. இதில் மருத்துவர் மட்டும் எந்த வகையிலும் உயர்வானவர் அல்ல. அதிலும் இன்று காசு பிடுங்கவே அலையும் அரைகுறை மருத்துவர்களுக்கு பெரிய மரியாதையே தேவையில்லை.
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
01-ஜூலை-202208:08:00 IST Report Abuse
PalaniKuppuswamy சனாதன இந்து தர்மப்படி கல்வி மருத்துவம் ஜோதிடம் போன்ற தெய்வ கலைகள் மக்களை காக்க வேண்டி இலவசமாக மனித தர்மமாக இருந்துள்ளது ..நமது முன்னோர்கள் பல தர்மம் மருத்துவ மனைகளை இலவச சேவையாக நடத்தி வந்து உள்ளனர். ஆனால் இந்து தர்மத்தை அழித்து ஆங்கிலேய கல்வி முறையால் பணம் பிரதானமாகி விட்டது .ஆஸ்பத்திரிகள் பணம் கொள்ளை அடிக்கும் நிலையங்களாக ஆகிவிட்டது துற அதிஷ்டம். உலகிற்கே முன்னோடியாக இருந்த பாரதம் இன்று பணம் இருந்தால் சிகிச்சை இல்லை எனில் இல்லை என்று கருணை மறந்த மருத்துவ வியாபார கேந்திரமாக ஆகிவிட்டது .பணமே வாழ்கை என்று உள்ள அமெரிக்காவில் கூட முதலில் சிகிச்சை பின்னர் பணம் என்னும் தொழில் தர்மமாம் கடைபிடிக்கிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X