செண்டுமல்லி விலை: விவசாயிகள் கவலை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், செண்டுமல்லிக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம் தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. அதோடு, ஊடுபயிராக சிறிய பரப்பளவில் குறுகிய கால பயிரான, பூ வகைகளும்
செண்டுமல்லி விலை: விவசாயிகள் கவலை

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், செண்டுமல்லிக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம் தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. அதோடு, ஊடுபயிராக சிறிய பரப்பளவில் குறுகிய கால பயிரான, பூ வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையிலும், விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வடிவேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் கூறுகையில், " ஒரு ஏக்கரில், செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளேன். தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ள நிலையிலும், விலை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ, 18 முதல் 20 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. இந்த விலை நஷ்டத்தையே ஏற்படுத்தும். தற்போது, அடிக்கடி மழையும் பெய்து வருவதால், மழையால், பூக்கள் சேதமடைந்து வருகிறது. இன்னும், 50 நாட்களுக்கு, முகூர்த்த தினங்களும் இல்லாததால், விலை ஏறவும் வாய்ப்பு இல்லை," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X