கொப்பரையும் போச்சு; பணமும் வரலை! * தேங்காய் வியாபாரியை ஏமாற்றியவருக்கு வலை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை:கொப்பரை தேங்காய் வாங்கிக்கொண்டு, பணம் தராமல் ஏமாற்றியது தொடர்பாக, நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை உப்பிலிபாளையம் தெய்வேந்திர வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 60. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேங்காய் மற்றும் கொப்பரை வியாபாரம் செய்து வருகிறார்.இவர், ஆன்லைன் தளங்களில் செய்திருந்த விளம்பரத்தை பார்த்து, அன்வர் சதாத் என்ற நபர் போன்

கோவை:கொப்பரை தேங்காய் வாங்கிக்கொண்டு, பணம் தராமல் ஏமாற்றியது தொடர்பாக, நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை உப்பிலிபாளையம் தெய்வேந்திர வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 60. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேங்காய் மற்றும் கொப்பரை வியாபாரம் செய்து வருகிறார்.இவர், ஆன்லைன் தளங்களில் செய்திருந்த விளம்பரத்தை பார்த்து, அன்வர் சதாத் என்ற நபர் போன் செய்தார். 'நியூ ராயல் புட்ஸ்' என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தனக்கு கொப்பரை தேங்காய் 5 டன் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.அதன்படி, இந்தாண்டு மார்ச் 15ல் ஒரு டன் கொப்பரை, மார்ச் 19ல் இன்னொரு டன் கொப்பரையை அன்வர் சதாத் குறிப்பிட்ட காந்திபுரம் ராஜூ நாயுடு லே அவுட் இரண்டாம் வீதிக்கு அனுப்பி வைத்தார்.அவற்றை பெற்றுக் கொண்ட அன்வர் சதாத், 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். காசோலைகளை உடனடியாக வங்கியில் செலுத்த வேண்டாம் என்றும், குறிப்பிட்ட நாள் கழித்து செலுத்தலாம் என்றும் கூறினார்.அதன்படி, குறிப்பிட்ட நாள் கழித்து செலுத்திய பிறகும், வங்கியில் பணம் இல்லை என்று காசோலை திரும்ப வந்து விட்டது. அதிர்ச்சியடைந்த உதயகுமார், ரத்தினபுரி போலீசில் புகார் தெரிவித்தார்.சிறப்பு எஸ்.ஐ., நல்லதம்பி, மோசடி வழக்கு பதிந்தார். எஸ்.ஐ., ஆரோக்கிய தனசீலன், குற்றம் சாட்டப்பட்ட அன்வர் சதாத்தை தேடி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X