சித்ரவதை விசாரணை இருக்காது: கோவை போலீஸ் கமிஷனர் உறுதி

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை;''மாநகர போலீசில் சித்ரவதை விசாரணை பயன்படுத்தப்படாது,'' என்று போலீஸ் கமிஷனர் உறுதி அளித்தார்.கோவை வக்கீல் சங்கம் சார்பில், சித்ரவதையால் பாதித்தோருக்கான சர்வதேச ஆதரவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சித்ரவதைக்கு முடிவு கட்டும் விழிப்புணர்வு போஸ்டரை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டு பேசியதாவது:சித்ரவதை என்பது சட்டத்திலும், நடைமுறையிலும்,
சித்ரவதை விசாரணை இருக்காது: கோவை போலீஸ் கமிஷனர் உறுதி

கோவை;''மாநகர போலீசில் சித்ரவதை விசாரணை பயன்படுத்தப்படாது,'' என்று போலீஸ் கமிஷனர் உறுதி அளித்தார்.கோவை வக்கீல் சங்கம் சார்பில், சித்ரவதையால் பாதித்தோருக்கான சர்வதேச ஆதரவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சித்ரவதைக்கு முடிவு கட்டும் விழிப்புணர்வு போஸ்டரை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டு பேசியதாவது:சித்ரவதை என்பது சட்டத்திலும், நடைமுறையிலும், நம் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று. காவல் துறையினர், விசாரணை மேற்கொள்வதற்கு சித்ரவதையினை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது.
எந்த நாகரீக சமுதாயத்திலும், சித்ரவதையை ஏற்க முடியாது. ஐ.நா.சபை, சித்ரவதைக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது. கோவை மாநகர காவல்துறையில், சித்ரவதை விசாரணை பயன்படுத்தப்படாது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சித்ரவதைக்கு முடிவு கட்டும் போஸ்டர், மாநகர கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வைக்கப்படும். இவ்வாறு, போலீஸ் கமிஷனர் பேசினார்.நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்ட வக்கீல் சங்க மனித உரிமை பிரிவு தலைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க செயலாளர் கலையரசன் வரவேற்றார். மாவட்ட வக்கீல் சங்க மனித உரிமை பிரிவு கன்வீனர் சாரதி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X