பூங்கா இடம் தனியாருக்கு பரிவர்த்தனை:அரசுக்கு முன்மொழிவு அனுப்ப தீர்மானம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை;கோவை மாநகராட்சி பூங்கா இடத்தை, தனியாருக்கு வழங்கி விட்டு, அவர்களது இடத்தை மாற்றிக் கொள்ள, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி., நகரில் பூங்காவுக்கு ஒதுக்கிய பொது ஒதுக்கீட்டு இடம் உள்ளது. இதன் அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடம் சீராக
பூங்கா இடம் தனியாருக்கு பரிவர்த்தனை:அரசுக்கு முன்மொழிவு அனுப்ப தீர்மானம்

கோவை;கோவை மாநகராட்சி பூங்கா இடத்தை, தனியாருக்கு வழங்கி விட்டு, அவர்களது இடத்தை மாற்றிக் கொள்ள, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி., நகரில் பூங்காவுக்கு ஒதுக்கிய பொது ஒதுக்கீட்டு இடம் உள்ளது. இதன் அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடம் சீராக இல்லாததால், பூங்கா இடத்தில், 2,356.60 சதுரடி இடத்தை பரிவர்த்தனை செய்து கொள்ள, கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, நகரமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.இதுதொடர்பாக, தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. மனுதாரர் யார் என்கிற விபரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. வார்டு எண் குறிப்பிடவில்லை. நகர ஊரமைப்பு துறையில், அனுமதி பெறப்பட்ட வரைபட அனுமதி எண் தவறாக கூறப்பட்டிருந்தது. பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையில், வெளிப்படைத்தன்மை இல்லாமல் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது.இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பயன் இருக்கிறதா என, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், சந்தேகம் கேட்டார்.இந்திய கம்யூ., கவுன்சிலர் சாந்தி பேசுகையில், ''மனுதாரர் யார் என்கிற தகவலை தெரிவிக்கவில்லை. வரைபடம் மற்றும் கோரிக்கை கடித நகல் மன்றத்துக்கு வைக்கப்படவில்லை,'' என்றார்.நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள் பதிலளிக்கையில், ''பூங்காவுக்கு ஒதுக்கிய, 2,356.60 சதுரடி இடத்தை கொடுத்து விட்டு, அதே அளவு இடத்தை மாநகராட்சிக்கு பெற்றுக் கொள்கிறோம்.
அனுமதி கோரி, தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்ப இருக்கிறோம்,'' என்றார்.நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ் கூறுகையில், ''மனுதாரர் கோரிக்கை மனு, வரைபடம் உள்ளிட்ட தகவல்கள், நகரமைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது,'' என்றார்.மேயர் கல்பனா குறுக்கிட்டு, ''மாநகராட்சிக்கு எவ்வித இழப்பும் இல்லை என்பதால், தீர்மானம் அனுமதிக்கப்படுகிறது,'' என கூறி நிறைவேற்றியதாக அறிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X