காதல் திருமணம் செய்த மாணவி:கடத்தப்பட்டதாக கணவர் புகார்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை:காதல் திருமணம் செய்த இளம்பெண் உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பற்றி, காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.காரமடை ஆசிரியர் காலனி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் சூர்யா, 22; கட்டுமானத் தொழிலாளி. இவரும், தேவதர்ஷினி என்பவரும், ஜூன் 22ம் தேதி தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தை ஏற்காத தேவதர்ஷினியின் பெற்றோர், காரமடை போலீசில் புகார் தெரிவித்தனர்.

விசாரித்த போலீசார், இருவரும் மேஜர் என்பதால் இருவரையும் அவர்கள் விருப்பப்படி அனுப்பி விட்டனர்.தேவதர்ஷினியை செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக, சூர்யா அழைத்து வந்திருந்தார். ஜூன் 28ல் இருவரும் காந்திபுரம் டவுன் பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்தபோது, தேவதர்ஷினியின் உறவினர் ரஞ்சித், சூர்யாவை சரமாரியாக தாக்கினார்.அவர் நிலை குலைந்த வேளையில், தேவதர்ஷினியை கடத்திச்சென்று விட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சூர்யா, காட்டூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். விசாரித்த சிறப்பு எஸ்.ஐ., பிரேம் சுகுமார், ரஞ்சித் மீது வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X