ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு புதிய ஸ்டேஷன் கமாண்டர்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை:புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., அக்ரானி ஸ்டேஷன் கமாண்டராக, புதிதாக நியமிக்கப்பட்ட கமாடோர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில், இந்திய கடற்படையின் தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி வழங்கும் நிறுவனமான ஐ.என்.எஸ்., அக்ரானி செயல்பட்டு வருகிறது. இங்கு கடற்படை அலுவலர்கள், வீரர்களுக்கான பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி
ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு புதிய ஸ்டேஷன் கமாண்டர்

கோவை:புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., அக்ரானி ஸ்டேஷன் கமாண்டராக, புதிதாக நியமிக்கப்பட்ட கமாடோர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில், இந்திய கடற்படையின் தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி வழங்கும் நிறுவனமான ஐ.என்.எஸ்., அக்ரானி செயல்பட்டு வருகிறது. இங்கு கடற்படை அலுவலர்கள், வீரர்களுக்கான பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி நிறுவனத்தின் ஸ்டேஷன் கமாண்டராக கமடோர் அசோக் ராய் பணிபுரிந்து வந்தார். கடந்த, மே 2019ம் ஆண்டு முதல், இவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஐ.என்.எஸ்., அக்ரானியின் கட்டளை அலுவலர் மற்றும் ஸ்டேஷன் கமாண்டராக கமாண்டர் மன்மோகன்சிங் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று கமாண்டர் மன்மோகன் சிங் பெறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான நிகழ்வு கோவை ஐ.என்.எஸ்., அக்ரானியில் நடந்தது. கமாண்டர் மன்மோகன்சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கமடோர் அசோக் ராய் பொறுப்புகளை மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார்.தேசிய பாதுகாப்பு அகாடமியின், முன்னாள் மாணவரான கமடோர் மன்மோகன் சிங், 1992ம் ஆண்டு முதல், இந்தியக் கடற்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X