ரயில் மறியல் வழக்கில்தி.மு.க.,வினருக்கு குற்றநகல்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை;ரயில் மறியல் போராட்ட வழக்கில், தி.மு.க., வினருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி, 2018, ஏப்., 5ல் வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், தி.மு.க., வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி, பைந்தமிழ்பாரி, சுரேஷ்குமார், நாச்சிமுத்து, முருகவேல், கார்த்திக் செல்வராஜ்

கோவை;ரயில் மறியல் போராட்ட வழக்கில், தி.மு.க., வினருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி, 2018, ஏப்., 5ல் வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், தி.மு.க., வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி, பைந்தமிழ்பாரி, சுரேஷ்குமார், நாச்சிமுத்து, முருகவேல், கார்த்திக் செல்வராஜ் உட்பட 11 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமி உட்பட 10 பேர் ஆஜரானார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. தி.மு.க., தரப்பில் வக்கீல் அருள்மொழி ஆஜரானார். அதை தொடர்ந்து, விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X