காஸ் கசிவால் தீ விபத்து: பெண் பலி:நால்வர் படுகாயம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை;காஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கோவை மணியகாரம்பாளையம் கல்பனா லேஅவுட்டை சேர்ந்தவர் தினேஷ், 27; தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சரண்யா, 23. இந்த தம்பதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவருடன் தாயார் லலிதாம்பிகை, 47, மாமியார் சுமதி, 45, கொழுந்தன் திலீப்

கோவை;காஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கோவை மணியகாரம்பாளையம் கல்பனா லேஅவுட்டை சேர்ந்தவர் தினேஷ், 27; தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சரண்யா, 23. இந்த தம்பதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவருடன் தாயார் லலிதாம்பிகை, 47, மாமியார் சுமதி, 45, கொழுந்தன் திலீப் குமார், 21, ஆகியோர் வசிக்கின்றனர்.கடந்த 28ம் தேதி லலிதாம்பிகை, சுமதி இருவரும் வீட்டில் சமையலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். சிலிண்டர் கசிவு காரணமாக, வீடெங்கும் சமையல் காஸ் பரவி இருந்தது. அதை கவனிக்காமல் அடுப்பு பற்ற வைத்தபோது, வீட்டில் தீ பற்றிக் கொண்டது. தீ வேகமாக பரவியதால், வீட்டில் இருந்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.அவர்களை, அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி லலிதாம்பிகை இறந்தார். மற்ற நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி, எஸ்.ஐ., பாலச்சந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X