'போக்சோ'வில் சிக்கியவர் நுரை கக்கிய நிலையில் மரணம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை:'போக்சோ' வழக்கில் சிக்கிய நபர், வாயில் நுரை தள்ளிய நிலையில் தெருவில் சடலமாக கிடந்தது பற்றி, காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் பண்ணாரிமுத்து, 42. கூலி வேலை பார்த்த இவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இவர், சில ஆண்டுகளுக்கு முன் இளம் வயதினர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அந்த

கோவை:'போக்சோ' வழக்கில் சிக்கிய நபர், வாயில் நுரை தள்ளிய நிலையில் தெருவில் சடலமாக கிடந்தது பற்றி, காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் பண்ணாரிமுத்து, 42. கூலி வேலை பார்த்த இவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இவர், சில ஆண்டுகளுக்கு முன் இளம் வயதினர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு குறித்த நாட்களில் கோர்ட்டில் ஆஜர் ஆவதில்லை. அவருக்கு சம்மன் அளிப்பதற்காக, அவரது சகோதரரை போனில் அழைத்து போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்படி அவரது சகோதரர் தேடியபோது, பண்ணாரிமுத்து, வாயில் நுரை தள்ளியபடி சத்தி ரோடு ஜி.பி., சிக்னல் பஸ்ஸ்டாப்பில் விழுந்து கிடப்பது தெரியவந்தது. விஷம் குடித்திருந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் பற்றி எஸ்.ஐ., வெள்ளிராஜ் விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X