கோவை;மாணவியரிடம் பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக கோவை அரசு நர்சிங் பள்ளி முதல்வரை மருத்துவ கல்வி இயக்குனரகம், 'சஸ்பெண்ட்' செய்தது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அரசு நர்சிங் பள்ளி செயல்பட்டு வருகிறது. கல்லுாரி முதல்வராக வசந்தி பணிபுரிந்து வந்தார்.நர்சிங் பி.எஸ்சி., படிப்பில், 300 மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களில் தொடர் விடுப்பு, பாதியில் படிப்பை விடுத்தவர்கள் என, தற்போது, 287 பேர் பயின்று வருகின்றனர்.கல்லுாரி முதல்வர் வசந்தி மாணவியரிடம், செய்முறைத் தேர்வுகளுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.மாணவியர் புகார் அடிப்படையில், மருத்துவ கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. புகார் உண்மை எனத் தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை சஸ்பெண்ட் செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''மாணவியரின் புகார் குறித்து விசாரிக்க சிறப்புக்குழுவை மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஏற்படுத்தியது. விசாரணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.அரசு நர்சிங் பள்ளி முதல்வர் வசந்தி நேற்று ஒய்வு பெற இருந்த நிலையில், அவரை நேற்றுமுனம்தினம் சஸ்பெண்ட் செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.