ஈமு நிறுவனம் மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கோவை:ஈமு நிதி நிறுவனம், 1.20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சென்னிமலை ரோட்டில், 'ராஜா ஈமு' மற்றும் 'தமிழ் ஈமு பார்ம்' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், 1.5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 7,000 ரூபாய் வட்டி, போனஸ் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி, 72 பேர், 1.20 கோடி

கோவை:ஈமு நிதி நிறுவனம், 1.20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சென்னிமலை ரோட்டில், 'ராஜா ஈமு' மற்றும் 'தமிழ் ஈமு பார்ம்' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், 1.5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 7,000 ரூபாய் வட்டி, போனஸ் தருவதாக விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, 72 பேர், 1.20 கோடி ரூபாய் டெபாசிட் செய்தனர்.ஆனால், முதலும், வட்டியும் திருப்பி தராமல் மோசடி செய்ததால், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து, நிறுவன இயக்குனர்கள், சென்னை வடபழநி, குமரன் காலனியை சேர்ந்த தமிழ்பிரபு,38, ஈரோடு அம்மாபேட்டை, காமராஜர் வீதியை சேர்ந்த ராஜசேகர்,42, மற்றும் ரவிச்சந்திரன், கிருத்திகா, குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்டவர்களில், தமிழ்பிரபு, ராஜசேகர் ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை, ஒரு கோடியே 18 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையில், 1.18 கோடியை, டெபாசிட்தாரர்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிட்டார். தீர்ப்பின்போது, இருவரும் கோர்ட்டில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X