அருவருப்பான தலைவர்கள்: புடின் பதிலடி

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மாஸ்கோ :''மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,'' என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த 'ஜி-7' மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின்
அருவருப்பான தலைவர்கள்: புடின் பதிலடி

மாஸ்கோ :''மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,'' என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.

கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த 'ஜி-7' மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், 'நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது தெரியும்' என்றார்.



latest tamil news


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், 'மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் புடின் போல வெற்றுடம்புடன் குதிரை சவாரி செய்யலாம்' என்றார்.இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு புடின் கூறியதாவது:மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கழற்றப் போவது, கால் சட்டையையா அல்லது மேல் சட்டையையா என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அந்த தோற்றத்தில் அவர்களை பார்க்க அருவருப்பாகவே இருக்கும்.
ஏனெனில் அவர்களிடம் மது அருந்துவது உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள் உள்ளன. என்னைப் போல கட்டான உடற்கட்டுக்கு தினமும் உடற்பயிற்சியும், விளையாட்டுகளில் பங்கேற்பதும் முக்கியம். அது, மேற்கத்திய தலைவர்களிடம் இல்லையே என்பது தான் என் கவலை.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
01-ஜூலை-202216:09:35 IST Report Abuse
jayvee இப்படி தனிப்பட்ட முறையில் ஒரு தலைவரை தாக்கித்தான் இன்று ராவுல் வின்சி காணாமல் போய்விட்டார்.. கனடா பிரதமர் ஒரு புத்தி ஸ்வாதீனமில்லாத தலைவர் என்பதை உலகறியும்..
Rate this:
Cancel
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202210:14:43 IST Report Abuse
sunny raja யார் அதிக துணி கழற்றுவது பற்றி போட்டி. பலே பலே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X