வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. மற்ற 92 பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, 107 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
![]()
|
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள், நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இது பற்றி, தேர்தலை நடத்தும் ராஜ்யசபா செயலர் பி.சி.மோடி நேற்று கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலுக்கு, 94 பேர் சார்பில், 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சார்பில், தலா நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
![]()
|
விண்ணப்பத் தொகையான, 15 ஆயிரம் ரூபாய் செலுத்தாதது மற்றும் தலா, 50 பேர் முன்மொழியாதது, வழிமொழியாதது போன்ற காரணங்களால், 92 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, 107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுவை திரும்பப் பெற, இன்று கடைசி நாளாகும். இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல், இன்று மாலை 3:00 மணிக்கு வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement