‛ஹெல்மெட், வேகக் கட்டுப்பாடு வாயிலாக 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும்'

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, 'சீட் பெல்ட்' அணிவது ஆகியவற்றின் வாயிலாக, இந்தியாவில், ஒரு ஆண்டில், 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மருத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும், 'லான்செட்' இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, 'சீட் பெல்ட்' அணிவது ஆகியவற்றின் வாயிலாக, இந்தியாவில், ஒரு ஆண்டில், 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.latest tamil newsமருத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும், 'லான்செட்' இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:உலகெங்கும், ஒவ்வொரு ஆண்டும், 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்.அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளை சரியான முறையில் கையாண்டால், 3.47 லட்சம் முதல், 5.4 லட்சம் வரையிலான உயிரிழப்பை தடுக்க முடியும்.வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது, மது போதையில் வாகனம் ஓட்டுவதை கைவிடுவது ஆகியவற்றை கையாண்டால், உயிரிழப்பை வெகுவாக குறைத்து விடலாம்.


latest tamil newsஇந்தியாவில், இந்த நான்கு விஷயத்தை கவனித்தால், ஆண்டுக்கு, 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும்.குறிப்பாக, வேகமாக செல்வதன் வாயிலாக ஏற்படும், 20,554 உயிரிழப்பை தடுக்கலாம். ஹெல்மெட் அணிவதை முறையாக பின்பற்றினால், 5,683 உயிரிழப்பை தடுக்கலாம்.கார்களில் சீட் பெல்ட் அணிந்தால், 3,204 உயிரிழப்பை தடுக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில், குடி போதையால் சாலை விபத்தில் உயிரிழப்போர் குறித்த தகவல்கள், இந்த ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202211:54:28 IST Report Abuse
அப்புசாமி இதெல்லாம் ஹெல்மெட் விற்பனை அதிகரிக்கவும், போடாதவங்க கிட்டே மாமூல் வசூலிக்கவும்தான் பயன்படும். கோடைக்காலத்தில் வெயில் அதிகமா இருக்கு. ஊரையே ஏ.சி பண்ண முடியுமான்னு பாருங்க.
Rate this:
Cancel
Balamurugan - Andipatty,இந்தியா
01-ஜூலை-202208:56:05 IST Report Abuse
Balamurugan தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடுவதன்மூலம் 99 சதவீத விபத்துக்களை தவிர்க்கலாம்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஜூலை-202207:28:45 IST Report Abuse
அசோக்ராஜ் ஐஎஸ்ஐ தரத்தில் உற்பத்தியான ஷூக்கள் அணிவதால் ஓராண்டில் மூன்று லட்சம் கால் முறிவுகள் தவிர்க்கப்படும் என்று அறிக்கையில் சேர்ப்பதாக இருந்தது. ஆனால் காலணி தயாரிப்பு நிறுவனங்கள் போதிய நன்கொடை வழங்க மறுத்ததால் அது அறிக்கையில் இடம் பெறவில்லை. இந்நிலையில் எல்மெட் தயாரிப்பாளர்கள் சிறப்பு ஷூக்கள் தயாரிக்க ரெடி என்று அறிவித்திருப்பதால் நீதித்துறையும் காவல்துறையும் திருப்தி தெரிவித்துள்ளனர்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
01-ஜூலை-202211:33:51 IST Report Abuse
Balajiஅருமை.. ஹா ஹா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X