இது உங்கள் இடம்: மீள்வீர்கள்; மீண்டும் எழுவீர்கள் கமல்!| Dinamalar

இது உங்கள் இடம்: மீள்வீர்கள்; மீண்டும் எழுவீர்கள் கமல்!

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (37) | |
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: அ.கருப்பையன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'நடிகர் கமலுக்கு அரசியல் சரிப்பட்டு வராது' என்று, வாசகர் ஒருவர் இப்பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அது, அவரின் கருத்தாக இருக்கலாம். ஆனால், பல கோடி ரூபாய் வருமானத்தை இழந்து, தமிழக மக்கள் மீதான உண்மையான அன்பால், கட்சி ஆரம்பித்தவர் நடிகர் கமல். அரசியல்
Kamal, Kamal Haasan,politics, MNM, கமல், கமல்ஹாசன்,மநீம

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


அ.கருப்பையன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'நடிகர் கமலுக்கு அரசியல் சரிப்பட்டு வராது' என்று, வாசகர் ஒருவர் இப்பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அது, அவரின் கருத்தாக இருக்கலாம். ஆனால், பல கோடி ரூபாய் வருமானத்தை இழந்து, தமிழக மக்கள் மீதான உண்மையான அன்பால், கட்சி ஆரம்பித்தவர் நடிகர் கமல்.

அரசியல் ஒரு சாக்கடை என்பது, அவரின் ஆழ்ந்த அறிவுக்கு தெரியாதது அல்ல; ஆனால், அந்த அரசியலை உருவாக்குவது மக்கள் என்ற தெளிந்த நீரோடை என்பது, அவருக்கு நன்றாகவே தெரியும்.

தன்னை போன்ற ஊழல் இல்லாத நபர்கள் ஒன்று கூடினால், தெளிந்த நீரோடையை பல வழிகளில் திறந்தால், அரசியல் சாக்கடை காணாமல் போய் விடும் என்பதே அவரின் ஆதங்கம். ஊழலற்ற ஒரு தமிழகத்தை உருவாக்க எண்ணிய, ஒரு தெளிவான மனிதரை சொல்லாலும், செயலாலும் நையாண்டி செய்கிறீர்களே... அது சரியா?

அவர் நினைத்திருந்தால், முதலில் களமிறங்கிய ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், ஏதேனும் ஒரு கட்சியின் தோள் மீது ஏறி, குறிப்பிட்ட அளவு எம்.எல்.ஏ., க்களை பெற்றிருக்கலாம். ஏன் அவரே எம்.எல்.ஏ.,வாகி இருக்கலாம்; கணிசமான பணமும் சேர்த்திருக்கலாம்.


latest tamil newsஎங்களைப் போன்றோர், கமலை இந்த மண்ணின் மைந்தனாக, தன் கருத்துக்களை தயக்கமின்றி சொல்பவராக, முறுக்கு மீசை வைத்த ஒரு வீர மறவனாக, ஒரு பாரதியாகவே பார்க்கிறோம். தமிழினத்தின் வீர அடையாள ஆணிவேராகவும் பார்க்கிறோம். அது மட்டுமின்றி, தமிழினத்தின் பெருமையாக தமிழ் புலமையிலும், கலைகளிலும், சகல கலா வல்லவனாகவும் பார்க்கிறோம்.

கமல் அவர்களே... நீங்கள் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று, தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அது தோல்வியே அல்ல.அன்று படம் நன்றாக இருந்தும் தோல்வியுற்றது விக்ரம்; இன்று படம் மிக நன்றாக இருந்து, உலக வெற்றி பெற்ற விக்ரம் போல மீள்வீர்கள்; மீண்டு எழுவீர்கள். அரசியல் உலகம் உங்களை இரண்டாவது விக்ரம் போல, ஒரு நாள் கொண்டாடும். மொத்தத்தில் வாய்மையே வெல்லும் கவலைப்படாதீர்கள்.

பதவி ஆசை, பண ஆசையின்றி, ஊழல் சாக்கடைகளை சுத்தப்படுத்த தொடர்ந்து போராடுங்கள்; குரல் கொடுங்கள். அதை, தமிழக மக்கள் உற்று நோக்குகின்றனர். நீங்கள் குரல் கொடுக்கும் போது, ஊழல்வாதிகள் யோசிக்கின்றனர். உங்கள் வருமானத்தை இழக்காமல் உங்கள் தொழிலை தொடர்ந்து செய்து, உடலை ஆரோக்கியமாக பேணி, உங்கள் உண்மை தொண்டர்களுடன் அரசியல் பணியாற்றுங்கள்.

அதே நேரத்தில், எந்த மதத்தையும், சில கருத்துக்களால் புண்படுத்துவதை தவிருங்கள். குறிப்பாக, ஹிந்து மதத்தை சில கருத்துக்களால் புண்படுத்தி பேசுவதை தவிர்க்கவும். ஹிந்து மதத்தை விமர்சிப்பது, பெற்ற தாயை எட்டி உதைப்பது போன்றது. அரசியலில் உங்கள் பயணம் தொடர வேண்டும்; நிச்சயம் சாதிப்பீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X