ஆம்புலன்ஸ் காணவில்லை 108 ஊழியர்கள் பதட்டம்| Dinamalar

'ஆம்புலன்ஸ் காணவில்லை' '108' ஊழியர்கள் பதட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
மதுரை : மதுரை ரிசர்வ்லைன் அருகே நிறுத்தப்பட்டிருந்த '108' ஆம்புலன்சை காணவில்லை என ஊழியர்கள் பதறியதை அடுத்து மேலுாருக்கு கூடுதல் சேவைக்காக அனுப்பப்பட்டது தெரியவந்தது.மூன்று மாதங்களுக்கு முன் ரிசர்வ்லைன் பகுதி உட்பட 10 புதிய இடங்களில் '108' ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. ரிசர்வ்லைன் பகுதியில் நிறுத்தியிருந்த ஆம்புலன்சை 3 நாட்களாக காணவில்லை என ஊழியர்கள்

மதுரை : மதுரை ரிசர்வ்லைன் அருகே நிறுத்தப்பட்டிருந்த '108' ஆம்புலன்சை காணவில்லை என ஊழியர்கள் பதறியதை அடுத்து மேலுாருக்கு கூடுதல் சேவைக்காக அனுப்பப்பட்டது தெரியவந்தது.

மூன்று மாதங்களுக்கு முன் ரிசர்வ்லைன் பகுதி உட்பட 10 புதிய இடங்களில் '108' ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. ரிசர்வ்லைன் பகுதியில் நிறுத்தியிருந்த ஆம்புலன்சை 3 நாட்களாக காணவில்லை என ஊழியர்கள் பதறினர்.அவர்கள் கூறியதாவது: நிர்வாகத்திடம் கேட்டால் தஞ்சாவூர் சென்றுள்ளது என்கின்றனர்.

ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் இரவு சேவை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்சை எடுத்துச் சென்றதால் ரிசர்வ் லைன் பகுதியிலிருந்து சத்திரப்பட்டி, அலங்காநல்லுார் வரை வேறு சேவை இன்றி சிரமப்படுகிறோம். விபத்தென்றால் புதுாரில் இருந்து செல்கிறோம். எங்களுக்கு வேலைப்பளு அதிகமாகிறது, என்றனர்.

சேவை மேலாளர் விமல்ராஜ் கூறியதாவது:ரிசர்வ்லைன் பகுதியில் மாதம் சராசரியாக 25 முதல் 30 அவசர அழைப்புகளே பெறப்பட்டது. மேலுாரில் 250 அழைப்புகள் பெறப்படுகிறது. அங்கு தேவை அதிகமாக உள்ளதால் ரிசர்வ்லைன் ஆம்புலன்ஸ் மேலுாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகலில் 10 விபத்துகள் ஏற்பட்டால் இரவில் 2 சதவீதமாக குறைகிறது. அதனால் இரவு சேவை குறைக்கப்பட்டுள்ளது.

புதுார், கள்ளந்திரி, மதுரை அரசு மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ் என 4 உள்ளதால் இப்பகுதி தேவைக்கு சரியாக இருக்கும். வேலைப்பளு ஏற்படாது. மதுரை அரசு மருத்துவமனை பகுதி மற்றும் பைகாராவில் பைக் ஆம்புலன்ஸ் மூலம் மாதம் சராசரியாக 60 பேருக்கு சேவை அளிக்கப்படுகிறது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X