தேர்தல் பத்திரங்கள் இன்று வெளியீடு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்கள், இன்று வெளியிடப்படுகின்றன. அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு, 2018ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது.இந்த பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்கள், இன்று வெளியிடப்படுகின்றன.



latest tamil news



அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு, 2018ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது.

இந்த பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு மட்டும், தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுவரை, 20 முறை மத்திய அரசின் ஒப்புதலுடன் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று, 21வது முறையாக, தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன

.இவற்றை, வரும் 10ம் தேதி வரை, சென்னை, புதுடில்லி, ஸ்ரீநகர், போபால், மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் வாங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.'தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட நாளில் இருந்து, 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதற்கு மேல் காலாவதியாகி விடும்.


latest tamil news



காலாவதியான தேர்தல் பத்திரங்களை 'டிபாசிட்' செய்தால், எந்த அரசியல் கட்சிக்கும் பணம் வழங்கப்படமாட்டாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லி., அல்லது சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளில், 1 சதவீதத்திற்கு மேல் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202214:51:13 IST Report Abuse
ஆரூர் ரங் நூன்றாண்டு திமுக மட்டுமே 100 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்களை🥲 பெற்றுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது
Rate this:
Cancel
01-ஜூலை-202212:41:49 IST Report Abuse
ஆரூர் ரங் இதனைத் தடை செய்தால் கட்சிகள் கறுப்பில் நிதி வசூலிக்கும். நிதி கொடுத்த பணக்காரர் வரிஏய்ப்பு செய்து அந்தப் பணத்தைக் கொடுப்பார். வாங்கின பணத்திற்கு கட்சி அதிகார துஷ்பிரயோகம் மூலம் சம்பாதிக்க உதவும். ஆக தேர்தல் பத்திரம் ஆகச்சிறந்த 👌 தீர்வு
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஜூலை-202210:55:47 IST Report Abuse
பாமரன் வாங்கறது மட்டுமே வெளிப்படை.. அதாவது எவ்ளோக்கு வாங்கினாங்கன்னு... யாருக்கு குடுக்கறோம்னு சொல்லப்பிடாது... ட்ரான்ஸ்பரன்சி பாஸ் ட்ரான்ஸ்பரன்சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X