--பட்டுவளர்ச்சியில் மதுரை பின்தங்கியுள்ளது ஏன்: உதவி இயக்குனர் கணபதி சிறப்பு பேட்டி| Dinamalar

--பட்டுவளர்ச்சியில் மதுரை பின்தங்கியுள்ளது ஏன்: உதவி இயக்குனர் கணபதி சிறப்பு பேட்டி

Added : ஜூலை 01, 2022 | |
மதுரை : 'மதுரையில் பட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக' பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி தெரிவித்துள்ளார்.அவரது சிறப்பு பேட்டி :தமிழகத்தில் பட்டுவளர்ச்சி துறையில் எந்த மாவட்டம் முன்னிலையில் உள்ளது.ஈரோடு முதலிடம், தேனிக்கு 2வது இடம்.மதுரை பின் தங்கியிருப்பது ஏன்.அரசு பட்டுக்கூடு அங்காடி, பட்டுப்
--பட்டுவளர்ச்சியில் மதுரை பின்தங்கியுள்ளது ஏன்: உதவி இயக்குனர் கணபதி சிறப்பு பேட்டி

மதுரை : 'மதுரையில் பட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக' பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி தெரிவித்துள்ளார்.அவரது சிறப்பு பேட்டி :

தமிழகத்தில் பட்டுவளர்ச்சி துறையில் எந்த மாவட்டம் முன்னிலையில் உள்ளது.
ஈரோடு முதலிடம், தேனிக்கு 2வது இடம்.

மதுரை பின் தங்கியிருப்பது ஏன்.
அரசு பட்டுக்கூடு அங்காடி, பட்டுப் பயிற்சி பண்ணை, இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையம் போன்றவை மதுரையில் இல்லாதது பட்டு வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதற்கு காரணமாக உள்ளது.

மதுரையில் அவற்றை அமைக்க ஏற்பாடு செய்துள்ளீர்களா.
உசிலம்பட்டியில் தனியார் பட்டு நுாற்பகம் உள்ளது. அப்பகுதியை சுற்றி நிறைய விவசாயிகள் புழுவளர்ப்பில் உள்ளனர். உசிலம்பட்டியில் அங்காடி, பயிற்சி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பட்டுப்புழு உற்பத்தியில் எத்தனை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 106 விவசாயிகள் இணைந்துள்ளனர். 60 பேர் புதிதாக மல்பெரி செடி நட்டு புழுவளர்ப்பு மனை அமைக்கும் நிலையில் உள்ளனர்.

மதுரையில் எங்கு உற்பத்தி அதிகம்.
சேடப்பட்டியில் அதிகம். மதுரை கிழக்கில் மிகவும் குறைவு. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

விற்பனை வாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமா.
தேனியில் நடமாடும் பட்டுக்கூடு அங்காடி உள்ளது. அங்கிருந்து வாரம் ஒருமுறை மதுரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது.
தமிழக அரசு மல்பெரி நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.10ஆயிரத்து 500 மானியம் வீதம் 5 ஏக்கர் வரை வழங்குகிறது. 1000 சதுர அடியில் புழுவளர்ப்பு மனை அமைக்க ரூ.1.20 லட்சம், கருவிகள் வாங்க ரூ.52ஆயிரத்து 500 மானியம் வழங்குகிறது. மத்திய, மாநில அரசின் 'சில்க் சமக்ரா' திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு குறையாமலும், 1500 சதுரஅடியில் மனை அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வீதம் 25 விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்காத விவசாயிகளுக்கு அதனை அமைத்து தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு : 94862 29510.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X