எம்.பி.க்கள் ரயில் பயணத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ 62 கோடி செலவு

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி-முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணம் செய்த வகையில் அரசுக்கு 62 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் அவரது மனைவியர், ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் இலவசமாக பயணிக்க சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணம் செய்த வகையில் அரசுக்கு 62 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news




லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் அவரது மனைவியர், ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் இலவசமாக பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முன்னாள் எம்.பி.,க்கள் முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் தனியாகவும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் துணையுடனும் பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணித்த வகையில் அரசுக்கு ஏற்பட்ட செலவு கணக்கை சமர்ப்பிக்குமாறு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news




இதன் அடிப்படையில், லோக்சபா செயலகம் அளித்த பதில்:கடந்த 2017 - 22 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 26.82 கோடி ரூபாயும், இந்நாள் எம்.பி.,க்களின் பயணத்துக்கு 35.21 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலமான 2020 - 21ல் மட்டும், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 2.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
01-ஜூலை-202213:24:12 IST Report Abuse
Barakat Ali நம்புங்கள், இந்தியா ஜனநாயக நாடு என்று .........
Rate this:
Cancel
01-ஜூலை-202210:25:40 IST Report Abuse
அப்புசாமி வேலை வெட்டியில்லாதவங்க தகவல் அறியும்சட்டத்தை வெச்சுக்கிட்டு கண்டதெல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. பி.எம்.கேர்ஸ் பத்தி கேள்வி கேளுங்கடா... பிசாத்து 62 கோடி .
Rate this:
Cancel
Natarajan Kandasamy - Erode,இந்தியா
01-ஜூலை-202210:00:41 IST Report Abuse
Natarajan Kandasamy பயணம் செய்தவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பிக்கள் தானா என்று ஆவணங்கள் மூலம் சரி பார்க்கப்பட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X