மீன் பிடிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
வில்லியனுார்,-கரிக்கலாம்பாக்கம் அருகே, ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற வாலிபர், மின்சாரம் தாக்கி இறந்தார்.புதுச்சேரி, பாகூர் அடுத்த தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அசோக்,26; புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். திருமணமாகி அகிலா என்ற மனைவியும், இரண்டரை வயதில் சசிதரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.அசோக்



வில்லியனுார்,-கரிக்கலாம்பாக்கம் அருகே, ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற வாலிபர், மின்சாரம் தாக்கி இறந்தார்.புதுச்சேரி, பாகூர் அடுத்த தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அசோக்,26; புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். திருமணமாகி அகிலா என்ற மனைவியும், இரண்டரை வயதில் சசிதரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.அசோக் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், அகிலா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அசோக், தனது தாய் சுசிலாவுடன் வசித்து வந்தார். சுசிலா நேற்று முன்தினம் வேலைக்கு சென்று, இரவு 11:45 மணிக்கு வந்தபோது, அசோக் வீட்டில் இல்லை. அவர் எப்பொழுதும், இரவு தாமதமாக வீட்டிற்கு வருவார் என்பதால் சுசிலா அதனைப் பொருட்படுத்வில்லை.இந்நிலையில் சுசிலா நேற்று காலை வேலைக்கு கிளம்பியபோது, கரிக்கலாம்பாக்கம் சாராயக் கடை அருகே அசோக் இறந்து கிடப்பதாக சிலர் கூறினர். அதிர்ச்சி அடைந்த சுசிலா அங்கு சென்று பார்த்த போது, வாய்க்கால் அருகில் கைகள் முன்புறம் கட்டிய நிலையில், தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து சுசிலா அளித்த புகாரின்பேரில், மங்கலம் போலீசார், அசோக் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் பிரேத பரிசோதனையில், அசோக் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. அதனையொட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அசோக் தனது நண்பர்கள் இருவருடன் நேற்று முன்தினம் இரவு, சாராயக்கடை அருகே உள்ள ஏரியில் மின்சாரம் பாய்ச்சி, மீன் பிடிக்க சென்றார்.ஒயரில் இரும்பு போல்டை கட்டி ஏரியில் வீசிய பின், அருகில் உள்ள மின் கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரத்தை பாய்ச்சினர். அப்போது ஏரி அருகில் நின்றிருந்த அசோக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் துாக்கி வீசப்பட்டதில் தலையில் அடிபட்டு இறந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இருவரும், ஒயர்களை அகற்றி விட்டு, அசோக் உடலை சாராயக்கடை அருகே போட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார், அசோக்குடன் மீன் பிடிக்க சென்ற இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X