நுாறு நாள் வேலை திட்டபணியாளர்கள் சாலை மறியல்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-புதுக்குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுகுப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களாக பணி வழங்கப்படவில்லை.இதனை கண்டித்தும், தொடர்ந்து பணி



புதுச்சேரி,-புதுக்குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுகுப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களாக பணி வழங்கப்படவில்லை.இதனை கண்டித்தும், தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும், நேற்று காலை 9:00 மணி அளவில் அக்கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், திருக்கனுார் - புதுச்சேரி சாலை, புதுக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்தகவலறிந்து வந்த கண்டமங்கலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X