சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
தேனி : ''சிறார்கள் வாகனம் ஓட்டினால், வாகன உரிமையாளர், பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதில் விபத்து ஏற்பட்டால், அபராதத்துடன் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது,'' என வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார். அவர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது: வட்டார
சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தேனி : ''சிறார்கள் வாகனம் ஓட்டினால், வாகன உரிமையாளர், பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதில் விபத்து ஏற்பட்டால், அபராதத்துடன் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது,'' என வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார்.

அவர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகம் பற்றி

மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தேனி, உத்தமபாளையத்தில் செயல்படுகிறது. இங்கு ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, புதுப்பித்தல், பள்ளி வாகனங்கள், பஸ், லாரி, ஆட்டோ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல், வரி வசூலித்தல், போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம் வசூலித்தல், விதிமீறிவோர் உரிமங்களை ரத்து செய்தல், சாலை பாதுகாப்பு வாரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடக்கின்றன.

போக்குவரத்து விதிகள் குறித்து

விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் மக்கள் விதிகளை முறையாக பின்பற்றாதது தான். இதை தவிர்க்க வாகனம் ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். உரிமம் பெற வருபவர்களுக்கு போக்குவரத்து விதிகள் தெரிவித்து, அதுகுறித்து எழுத்துதேர்வு நடத்தி உரிமம் வழங்கப்படுகிறது. மக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடக்கும் சாலை பாதுகாப்பு வாரம், மாதமாக மாற்றப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி

ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் ஆன்லைனில் எல்.எல்.ஆர்., பதிவு செய்ய வேண்டும். சாலை விதிகள், குறியீடுகள், அடையாளங்கள் குறித்து தெரிந்து கொள்ளுதல் அவசியம். நேரடியாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தை தொடர்பு கொண்டு மக்கள் பயன்பெறலாம். அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் தான் செய்யப்படுகின்றன. லைசென்சில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு முடிவு பெற்றால் அடுத்த ஒரு ஆண்டில் உரிமத்தை புதுபிக்காவிடில் அது காலாவதியாகி விடும். பின்புதிதாக விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். உரிமம் இன்றி வாகனம் இயக்கினால், ஓட்டுபவருக்கும்,வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் செயல்பாடு

தேனி மாவட்டத்தில் ஏப்., 2021 முதல் மார்ச் 2022 வரை போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது 3,119 வழக்குகள் பதிவு செய்து சம்பந்த பட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதில் 186 அதிவேகம், 371 அதிக பாரம் ஏற்றி சரக்கு வாகனங்கள், 371 அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், 530 சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியது, 86 மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், 114 விபத்தில் மரணம் ஏற்படுத்திய வழக்குகள் அடங்கும்.

பழைய வாகனங்கள் வாங்குபவர், விற்பவர் என்ன செய்ய வேண்டும்

வாகனங்களை விற்பவர்கள் டி.ஓ., படிவத்தை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே விற்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் விற்கப்பட்ட வாகனம் மீது வழக்கு பதிவு, விதிமீறல் நடக்கும் போது, விற்றவர்கள் பொறுப்பாக நேரிடும். அதே போல் பழைய வாகனங்களை வாங்குவதற்கு முன் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகனம் பற்றிய விபரங்களை சரிபார்த்த பின் வாங்க வேண்டும். இதனால் முறைகேடு, தவறான வாகனங்களை வாங்குவதை தவிர்க்கலாம்.

வாகனத்தில் மாறுதல் செய்தால் குற்றமா

கண்ணாடி இன்றி வாகனம் ஓட்டுவது குற்றம். ஹென்டில்பார், சைலன்சர், வண்டியின் கலர் உள்ளிட்டவற்றில் மாறுதல் செய்வது, பதிவு விதிகளை மீறியதற்கு சமம். இதில் ஒவ்வொரு மாறுதலுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் இருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.பஸ், சரக்கு வாகனங்களில் கட்டுமான அளவு மாறுபட்டால் ரூ. 10 ஆயிரமும், அதிக பாரம் ஏற்றினால் ரூ. 20 ஆயிரமும், கூடுதல் டன்னுக்கு தலா ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

சிறார்கள் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை உண்டா

சிறார்கள் வாகனம் ஓட்டினால், வாகன உரிமையாளர், பெற்றோர், பாதுகாவலரே குற்றவாளிகள். அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விபத்து ஏற்பட்டால் அபராதத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மக்கள் சேவையை பெற நேரடியாக அலுவலகத்தை அணுகலாம். சந்தேகம் ஏதும் இருந்தால் 04546 - 261 565 தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X