சிறுமி திருமணம்: 5 பேர் மீது வழக்கு| Dinamalar

சிறுமி திருமணம்: 5 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 01, 2022 | |
தேவதானப்பட்டி : சிறுமியை திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்தாம் வகுப்பு கல்வியை பாதியில் நிறுத்திய 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி 23. மன்னார்குடியில் தனது தாத்தா வீட்டில் தங்கி லாரி டிரைவராக வேலை

தேவதானப்பட்டி : சிறுமியை திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்தாம் வகுப்பு கல்வியை பாதியில் நிறுத்திய 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி 23. மன்னார்குடியில் தனது தாத்தா வீட்டில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்தார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருநெல்வேலிக்கு கடத்திச் சென்று கோவிலில் திருமணம் செய்தார். கர்ப்பிணியான சிறுமிக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி திருமணம் பற்றி குழந்தைகள் நலக்குழுவிடம் வாக்குமூலம் கொடுத்தார். எஸ்.ஐ., மகேஸ்வரி, அலெக்ஸ் பாண்டி அவரது உறவினர்கள் முருகன் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X