ஜி.எஸ்.டி., வருவாய் உயர்வு;ஆணையர் பத்மஸ்ரீ தகவல்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், கடந்த நிதியாண்டில் 601.16 கோடி ரூபாய் வரி ஈட்டியுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், கடந்த 2021-22ம் ஆண்டு 601.16 கோடி ரூபாய் வரி வருவாய்

புதுச்சேரி,-புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், கடந்த நிதியாண்டில் 601.16 கோடி ரூபாய் வரி ஈட்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், கடந்த 2021-22ம் ஆண்டு 601.16 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது.2020-21 நிதியாண்டினை ஒப்பிடும்போது, இது 63.30 கோடி ரூபாய் அதிகம். அதாவது, 11.77 சதவீதம் கூடுதல் வரி வருவாய் ஈட்டப் பட்டுள்ளது.தமிழ்நாடு மண்டலம் கடந்த 2021-22 நிதியாண்டில், மொத்தம் 41,090 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியது.இதில் புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகத்தின் பங்களிப்பு 1.46 சதவீதமாகும்.2020-21 நிதியாண்டில், புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், தமிழ்நாடு மண்டல வரி வருவாயில் (33,059 கோடி) 1.62 சதவீதம் (537.86 கோடி) பங்களிப்பினை வழங்கி உள்ளது. வரி செலுத்துவோரின் முழு ஒத்துழைப்புடன் இந்த இலக்கினை சாதித்துள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம் ஜி.எஸ்.டி., பதிவு, ஜி.எஸ்.டி., சேவாகேந்திரா, எஸ்.எம்.எஸ்., மூலம் நினைவூட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி, குறை தீர்வு மூலம் இந்த இலக்கினை எட்டி உள்ளது.புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகத்தில் 8,700க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் உள்ளனர். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நிதி சார்ந்த சேவை, சோப்பு, மெழுகு, பிளாஸ்டிக் உற்பத்தி, இரும்பு ராடு, ஸ்டீல், மெஷினரி உள்ளிட்ட தொழில்கள், வரி வருவாயில் பெரும் பங்களிப்பை செய்துள்ளன.ஐந்தாம் ஆண்டு ஜி.எஸ்.டி., தினம் இன்று 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X