விமான தளம் அமைக்கும் பணி; மாவட்ட வளர்ச்சி ஆணையர் ஆய்வு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெற அமைக்கப்படும் விமான தளத்தின் பணிகளை மாவட்ட வளர்ச்சி ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அங்கு பணிகளை முதன்முறையாக பொதுபணித்துறையினர் செய்து வருகின்றனர். 650 மீ., நீளத்தில் ஓடுதளம், நான்கு சிறிய விமானங்கள் நிறுத்தவதற்கு இடவசதி, 50 மாணவர்கள் தங்கும்

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெற அமைக்கப்படும் விமான தளத்தின் பணிகளை மாவட்ட வளர்ச்சி ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அங்கு பணிகளை முதன்முறையாக பொதுபணித்துறையினர் செய்து வருகின்றனர். 650 மீ., நீளத்தில் ஓடுதளம், நான்கு சிறிய விமானங்கள் நிறுத்தவதற்கு இடவசதி, 50 மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.விமானம் தரையிரங்கும் சோதனை ஓட்டம் இருமுறை நடத்தி ஓடுதளம் அருகில் உள்ள மண்திட்டுகளால் தரையிறங்க இயலாமல் தோல்வி ஏற்பட்டது. விமான தளத்தின் பணிகளை மாவட்ட வளர்ச்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தில் பொதுபணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீமாலா, மின்வாரிய செயற்பொறியாளர் டென்னீஸ் ஜோசப் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.விமான தளத்தில் விமானம் இறங்க இடையூறாக உள்ள மண் திட்டுகள் அகற்றப்படும். ஓடு தளத்தில் அடையாளப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளது. அனைத்து பணிகளும் பூர்த்தி செய்து ஜூலை இறுதிக்குள் விமானம் தரையிறங்கும் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அர்ஜூன்பாண்டியன் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X