பாண்கோஸ் பள்ளியில் பெற்றோர் போராட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருக்கனுார்-பாண்கோஸ் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழில் கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பு வைக்கப்பட்டதால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

திருக்கனுார்-பாண்கோஸ் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழில் கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பு வைக்கப்பட்டதால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற சென்ற போது, கல்வி கட்டண பாக்கியை செலுத்தினால் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து பெற்றோர்கள் இரு தினங்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். முதல்வர் ரங்கசாமி, பள்ளியின் மேலாண் இயக்குனர் யஷ்வந்தையாவிடம் பேசி, உடனடியாக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தினார். அதன்பேரில், நேற்று முன்தினம் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.அதில் தவறுதலாக, கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதாக குறிப்பு வைக்கப்பட்டது. இதனால், கட்டண பாக்கி ரூ. 6 லட்சத்திற்கும் மேல் கணக்கு காட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து, மாணவர்களை நேற்று பள்ளிக்கு அழைத்து, கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பு வைத்து மாற்று சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனால் மேற்படிப்பில் பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர் நமச்சிவாயம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர், கட்டணம் செலுத்தப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மேற்படிப்பில் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இதனால் எந்த பிரச்னையும் வராது என கூறியதை ஏற்று பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X