பள்ளிகள் திறந்து 17 நாள் ஓடி போச்சு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
வேடசந்துார் : பள்ளிகள் திறந்து 17 நாட்கள் ஆன நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாட புத்தகங்களை தவிர, நோட்டுகள் சீருடை உள்ளிட்ட வேறு எதுவும் வழங்காததால் வெகுவாக பாதிக்கின்றனர். அரசானது,அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, காலனி, புத்தக பை, அட்லஸ் மேப் உள்ளிட்ட 14 வகையான இலவச

வேடசந்துார் : பள்ளிகள் திறந்து 17 நாட்கள் ஆன நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாட புத்தகங்களை தவிர, நோட்டுகள் சீருடை உள்ளிட்ட வேறு எதுவும் வழங்காததால் வெகுவாக பாதிக்கின்றனர்.

அரசானது,அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, காலனி, புத்தக பை, அட்லஸ் மேப் உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் 13 ல் பள்ளிகள் திறந்த நிலையில் நேற்றுடன் ஜூன் மாதமும் முடிந்துவிட்டது.

ஆனால் இது வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தவிர வேறு எந்த பொருட்களும் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் பள்ளிகள் திறக்கும் முன்பே பாட புத்தகங்கள், பாட நோட்டுகள் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரை வழங்காததால் மாணவர்கள் தவிக்கின்றனர்.

ஆசிரியர்களும் மாணவர்களிடம் நோட்டுக்களை வாங்கி வர சொல்ல முடியாமல் ஒரு நோட்டாவது வாங்கி, அதில் ஐந்து பாடங்களையும் எழுதி வர சொல்கின்றார்.இதை தவிர்க்க மாணவர்களுக்கான இலவச பொருட்களை விரைந்து வழங்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X