சாயப்பட்டறைகளுக்கு தடை கோரி வழக்கு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே அரியநல்லுார் தமிழ்செல்வன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சின்னாளபட்டி, அம்பாத்துரையில் சட்டவிரோதமாக சில சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர், மண்வளம் மாசடைந்துள்ளது. விவசாயம் பாதித்துள்ளது. புதிதாக மேலும் சில சாயப்பட்டறைகளை அமைக்க முயற்சி நடக்கிறது. அதற்கு

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே அரியநல்லுார் தமிழ்செல்வன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சின்னாளபட்டி, அம்பாத்துரையில் சட்டவிரோதமாக சில சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர், மண்வளம் மாசடைந்துள்ளது. விவசாயம் பாதித்துள்ளது. புதிதாக மேலும் சில சாயப்பட்டறைகளை அமைக்க முயற்சி நடக்கிறது.

அதற்கு அனுமதியளிக்கக்கூடாது. சட்டவிரோதமாக செயல்படும் பட்டறைகளை அகற்ற வேண்டும் என திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் உறுப்பினர் செயலாளர்கள், திண்டுக்கல் கலெக்டர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூலை 7 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X