கள்ளக்குறிச்சிக்கு மேட்டூர் ஆற்றிலிருந்து குடிநீர்;நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சேலம், மேட்டூர் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சேலம், மேட்டூர் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக் வரவேற்றார். அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், மேலாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 622 கிராமங்கள் ஆகியவற்றுக்கு சேலம், மேட்டூர் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்கப்பட்டது.நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துருகம் சாலை மயானத்தில் தியான மண்டபம், காத்திருப்பு அறை, பேவர் பிளாக் நடைபாதை, அடக்கம் செய்யும் பகுதியில் ெஷட் அமைத்தல்.விநாயகா நகரில் 2 சிறு பாலங்கள், கோட்டைமேடு மகளிர் காவல் நிலைய பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல்.மேலும், அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவும், அதற்கான பொருட்களை வாங்குவது என்பது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X