பள்ளி மாணவர்களுக்கு உணவருந்தும் தளம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் உணவருந்தும் தளம் திறப்பு விழா நடந்தது.இப்பள்ளி மாணவர்கள் உணவருந்துவதற்காக 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தளம் அமைக்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் இரவில் கல்வி பயில்வதற்காக கள்ளக்குறிச்சி கமலா குரூப் மூலம் சூரிய சக்தி

கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் உணவருந்தும் தளம் திறப்பு விழா நடந்தது.

இப்பள்ளி மாணவர்கள் உணவருந்துவதற்காக 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தளம் அமைக்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் இரவில் கல்வி பயில்வதற்காக கள்ளக்குறிச்சி கமலா குரூப் மூலம் சூரிய சக்தி மின்சாரம் பெறுவதற்கான சோலார் விளக்குகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா நேற்று முன்தினம் காலை பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி உணவருந்தும் தளத்தை திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியின திட்ட அலுவலர் இளங்கோ, தனி தாசில்தார் நடராஜன், தலைமையாசிரியர் சீனிவாசன் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சஞ்சீவ்குமார், செந்தில்குமார், தேர்வு தலைவர் மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X