மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மூவர் நேரடி போட்டி

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
புவனகிரி-கீரப்பாளையம் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., என மூவர் நேரடி போட்டியில் உள்ளனர்.கீரப்பாளையம் ஒன்றியம், மாவட்ட ஊராட்சி 26 வது வார்டு கவுன்சிலர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு கவுன்சிலர் கலாராணி உடல் நலக்குறைவால் இறந்தார். இங்கு இடைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. 133 ஓட்டுச்



புவனகிரி-கீரப்பாளையம் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., என மூவர் நேரடி போட்டியில் உள்ளனர்.கீரப்பாளையம் ஒன்றியம், மாவட்ட ஊராட்சி 26 வது வார்டு கவுன்சிலர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு கவுன்சிலர் கலாராணி உடல் நலக்குறைவால் இறந்தார். இங்கு இடைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. 133 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.இப்பதவிக்கு 8 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த 28 ம் தேதி நடந்த பரிசீலனையில் 8 மனுக்களும் ஏற்கப்பட்டது. இதில், 5 பேர் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து தி.மு.க., சார்பில் மனோரஞ்சிதம், பா.ம.க., - தமிழ்ச்செல்வி, அ.ம.மு.க., - வாணிஸ்ரீ ஆகியோர் நேரடி போட்டியில் உள்ளனர்.தேர்தல் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வடிவு, துணை அலுவலர் ரவிச்சந்திரன், பி.டி.ஓ., ராமச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 26வது வார்டில் 40 ஊராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 25 ஆயிரத்து 677 பேர், பெண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 190 பேர் என, 51 ஆயிரத்து 867 பேர் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X