பள்ளி முன் வேகத்தடை கோரி காத்திருப்பு போராட்டம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திட்டக்குடி,-திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைசெயலாளர் முருகானந்தம், மேற்கு மாவட்டசெயலாளர் வீரராஜன், மகளிரணி அனிதா, கலைஇலக்கிய பேரவை முருகேசன் மற்றும் நிர்வாகிகள்



திட்டக்குடி,-திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

நிறுவனத் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைசெயலாளர் முருகானந்தம், மேற்கு மாவட்டசெயலாளர் வீரராஜன், மகளிரணி அனிதா, கலைஇலக்கிய பேரவை முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.அவர்களிடம் திட்டக்குடி சப்இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்துடன் போராட்டம் கைவிடப்பட்டது.பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க தயங்கினர்.

இதைக்கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் மீண்டும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் ராமலிங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்த பின்பே போராட்டம் கைவிடப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X