கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் ஒருவருக்கு 7 ஆண்டு, அபராதம்| Dinamalar

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் ஒருவருக்கு 7 ஆண்டு, அபராதம்

Added : ஜூலை 01, 2022 | |
விருதுநகர் : விருதுநகர் நீதிமன்றம், கொலை வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை, மற்றொரு சகோதரருக்கு 7 ஆண்டு சிறை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.அருப்புக்கோட்டை அருகே உடையநாத புரத்தை சேர்ந்தவர் லட்சுமி, இவரது கணவர் ராமசாமி. லட்சுமியின் சகோதரி நல்லம்மாள். இவரது மகளுக்கு தாய்மாமன் மகனை திருமணம் பேசினர். ஆனால் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. இதனால் இரண்டு

விருதுநகர் : விருதுநகர் நீதிமன்றம், கொலை வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை, மற்றொரு சகோதரருக்கு 7 ஆண்டு சிறை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அருப்புக்கோட்டை அருகே உடையநாத புரத்தை சேர்ந்தவர் லட்சுமி, இவரது கணவர் ராமசாமி. லட்சுமியின் சகோதரி நல்லம்மாள். இவரது மகளுக்கு தாய்மாமன் மகனை திருமணம் பேசினர். ஆனால் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. இதனால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.2013 ஆக.6ல் நல்லம்மாளின் மகன்களான முனியாண்டி, ராமகிருஷ்ணன், ராமலிங்கம் லட்சுமியிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த லட்சுமியின் கணவர் ராமசாமி மூவரையும் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் ராமசாமியை வெட்டிக் கொலை செய்தனர். பரளச்சி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது முனியாண்டி 35, ராமகிருஷ்ணன் 54, இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதமும், ராமலிங்கம் 37, க்கு 7 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ேஹமானந்த குமார் தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X