குடிநீர் இணைப்பு முறைகேடு; தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சிவகாசி : திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் வழங்கியதாக குழாய் பொருத்துனர் (பொறுப்பு) பணியில் இருந்த ஒருவரை மட்டுமே சஸ்பெண்ட் செய்திருப்பதோடு, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியில் மானுார் குடிநீர் திட்டத்தின் கீழ் முறைகேடாக குடிநீர் இணைப்பு

சிவகாசி : திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் வழங்கியதாக குழாய் பொருத்துனர் (பொறுப்பு) பணியில் இருந்த ஒருவரை மட்டுமே சஸ்பெண்ட் செய்திருப்பதோடு, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியில் மானுார் குடிநீர் திட்டத்தின் கீழ் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பிரச்னையில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையில் அப்போது குழாய் பொருத்துனர் (பொறுப்பு) பணியில் இருந்த கண்ணனை மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கலையரசன், பா.ஜ., மாவட்ட செயலாளர், திருத்தங்கல், திருத்தங்கல் பகுதியில் குழாய் பொருத்துனர் பணியில் இருந்த ஒருவரால் மட்டுமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. ஒருவரால் தன்னிச்சையாக செயல்பட்டு அனுமதி இன்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க சாத்தியமே இல்லை. ஒருவர் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். எனவே முறையாக விசாரித்து, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X