கவுன்சிலர் பெயரில் இரும்பு பெட்டிகள்அகற்ற நாங்க ரெடி... நீங்க ரெடியா...

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறாக நகராட்சி ஏற்கனவே வைத்துள்ள கடை பெட்டிகளை அகற்ற நாங்க ரெடி... கவுன்சிலர்களாகிய நீங்க ரெடியா... என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தலைவர் துரைஆனந்த் கேள்வி எழுப்பினார்.கவுன்சில் கூட்டம் தலைவர் துரை ஆனந்த் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் கார்கண்ணன் (தி.மு.க.,), கமிஷனர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி

சிவகங்கை : சிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறாக நகராட்சி ஏற்கனவே வைத்துள்ள கடை பெட்டிகளை அகற்ற நாங்க ரெடி... கவுன்சிலர்களாகிய நீங்க ரெடியா... என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தலைவர் துரைஆனந்த் கேள்வி எழுப்பினார்.

கவுன்சில் கூட்டம் தலைவர் துரை ஆனந்த் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் கார்கண்ணன் (தி.மு.க.,), கமிஷனர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி பங்கேற்றனர்.விவாதம் வருமாறு:

அன்புமணி (அ.ம.மு.க.,) : நகரில் சாக்கடை கழிவுகளை அகற்றி ரோட்டில் போடுவதை அகற்றுவதில்லை. நகராட்சியின் அப்ரூவல் இன்றி புதிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தலைவர்: நகராட்சி அப்ரூவல் இன்றி கட்டடம் கட்டக்கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெற்ற பின்னர் தான் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

ராமநாதன் (தி.மு.க.,): தெருக்களில் சேகரமாகும் குப்பை, சாக்கடை கழிவுகளை அகற்ற வாகனம் இன்றி நகரே குப்பை காடாக தான் காட்சி அளிக்கின்றன.கே.ராஜாபாண்டியன் (தி.மு.க.,): குப்பை வரி அதிகமாக வசூலிக்கின்றனர். இதை குறைக்க வேண்டும்.

தலைவர்: குப்பை வரி அரசு நிர்ணயிப்பது, அதை குறைக்கவோ, ரத்து செய்ய முடியாது.பிரியங்கா (காங்.,) : மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை வரி அதிகம் வசூலிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்கு டெபாசிட் செய்தோர் பட்டியலை வெளியிட வேண்டும்.

புஷ்பம் (தி.மு.க.,): எனது வார்டில் வாரத்திற்கு ஒரு நாள் தான் குடிநீர் வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. சாக்கடை கழிவுகளை அகற்றுவதே இல்லை. நகராட்சி காலனியில் சின்டெக்ஸ் தொட்டி சேதமாகியுள்ளன.

என்.எம்., ராஜா (அ.தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் எதிரே நகராட்சி கட்டடத்தில் தனியார் பலசரக்கு கடை நடத்த எந்தவிதிப்படி அனுமதி தரப்பட்டது. நகராட்சி இடத்தை தனியாருக்கு தாரை வார்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் பாஸ்கரன்: எனக்கு முன்பிருந்த கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டப்படி நகராட்சி இடத்தில் கடைக்கு அனுமதி தந்திருக்க கூடாது. அக்கடையை அகற்றி நகராட்சி இடத்தை பாதுகாப்போம். அக்கடைக்கு நோட்டீஸ் அனுப்பி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர்: ரோட்டோரத்தில் கடந்த ஆட்சியில் சில கவுன்சிலர் பெயரில் 37 இடங்களில் கடைக்காக இரும்பு பெட்டி வைத்துள்ளனர். அதற்கு பின் மேலும் 14 பெட்டி வைத்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு என மக்கள் புகார் அளிப்பதால் கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் அனைத்து இரும்பு பெட்டிகளையும் அகற்றிவிடுவோம். அதற்கு நாங்க ரெடி... கவுன்சிலர்களாகிய நீங்கள் ரெடியா...

எஸ்.தமிழ்செல்வி (அ.ம.மு.க.,) : செந்தமிழ்நகரில் சாக்கடை அள்ளவோ, குப்பைகளை சேகரிக்கவோ முறையாக வருவதில்லை. இதனால் தெரு, வீடுகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X